வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட 6ம் தேதி தமிழகம் வரும் மத்திய குழு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களை பார்வையிட வரும் 6ம் தேதி மத்திய குழு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை ஏமாற்றம் அளித்ததால் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதனால் வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகினர். செழித்து வளர வேண்டிய பயிர்கள் கருகி விட்டதால் விவசாயிகள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். மேட்டூர் அணை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் சென்னை தவிர 31 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

வறட்சி பகுதிகளை பார்வையிட தமிழக அரசு உயர்மட்ட குழுவை அமைத்தது. நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் மின்சாரத் துறை அமைச்சர் நந்தம் விஸ்வநாதன், உள்ளாட்சி துறை அமைச்சர் கேபி முனுசாமி, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், வருவாய் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், வேளாண்மை துறை அமைச்சர் தமோதரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

இவர்களுடன் வேளாண்மை துறை, வருவாய் துறை அதிகாரிகளும் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்தனர். இது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட 2 மத்திய குழுக்கள் வருகிற 6ம் தேதி தமிழகம் வருகிறது. திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுககு ஒரு குழுவும், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு மற்றொரு குழுவும் சென்று ஆய்வு செய்கிறது.

ஆய்வு பணிகளை முடித்து விட்டு சென்னையில் உயர் அதிகாரிகளை சந்தித்து வறட்சி நிவராணம் தொடர்பாக மத்திய குழு ஆலோசனை நடத்துகிறது. எனவே நெல்லை மாவட்டத்திலும் வறட்சி நிவாரண பணிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+