உலகின் அதிகாரமிக்க 500 மனிதர்கள் பட்டியலில் மன்மோகன், சோனியா, சிதம்பரம்
டெல்லி: பூமியின் அதிகாரமிக்க 500 மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட 16 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பூமியின் அதிகாரமிக்க 500 மனிதர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பிரபல ஃபாரீன் பாலிசி பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 16 இந்தியர்கள், சீனாவைச் சேர்ந்த 30 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ தளபதி பர்வேஸ் கயானி, ஐஎஸ்ஐ தலைவர் ஜாஹிர் உல் இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் தாலிபன் தலைவர் ஹகீமுல்லா மெஹ்சூத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
பிரதமர் மன்மகோன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உள்பட 16 இந்தியர்களின் பெயர் இந்த அதிகாரமிக்கோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ரா அதிகாரி ஆலோக் ஜோஷி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸின் தலைவர் உன்னி கருணாகரா, மும்பை மேயர் சுனில் பிரபு, அம்னஸ்டி இன்டர்நேஷனலின் பொதுச் செயலாளர் சலீல் ஷெட்டி ஆகியோரின் பெயர்களும் இப்பட்டியலில் உள்ளது.
அதிகாரமிக்க மனிதர்கள் பட்டியலில் உள்ள சில இந்தியர்களைப் பார்ப்போம்...

மன்மோகன் சிங்
நாட்டின் அதிகாரமிக்க பதவியில் இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் பூமியின் அதிகாரமிக்க மனிதர்களில் ஒருவர்.

சேனியா காந்தி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ப.சிதம்பரம்
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உலகின் அதிகாரமிக்க 500 மனிதர்களில் ஒருவர்.

சல்மான் குர்ஷித்
வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஷீலா தீட்சித், சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், முக்கிய எதிர்கட்சியான பாஜகவின் மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் உள்ளது.

பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ
யோகா குரு பாபா ராம்தேவ், மத தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரும் அதிகாரமிக்கவர்களாம்.

முகேஷ் அம்பானி, லக்ஷ்மி மிட்டல்
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஆர்சலர் மிட்டல் தலைவர் லக்ஷ்மி மிட்டல் ஆகியோரின் பெயர்களும் அதிகாரமிக்கோர் பட்டியலில் உள்ளது.

தலாய் லாமா
திபெத்திய மத குரு தலாய் லாமாவும் அதிகாரமிக்க 500 மனிதர்களில் ஒருவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications