லண்டன்: 'மகளிர் மட்டும்’ ஊர்வசி ஸ்டைலில் மேலதிகாரிக்கு காபியில் விஷம் கலந்த இந்தியப் பெண்
லண்டன்: தன் நடத்தை குறித்து, மேலதிகாரி விமர்சித்ததால், அவருக்கு காப்பியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக, இந்திய வம்சாவளியைச் சார்ந்த பெண் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், பெட்போர்ட்ஷயர், ஷெப்போர்டில் உள்ள ஷம்ஸ் மூப்பன் பல் மருத்துவமனையில் ரவீந்தர் கவுர் துணை செவிலியராகப் பணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் துடிப்புடன் செயல்பட்ட அவர், நாட்கள் செல்லச் செல்ல மற்ற பணியாளர்களுடன் சரியாக ஒத்துழைக்கவில்லையாம்.
சென்ற வருடம், ஜனவரி மாதம் பணியில் இருந்த சக ஊழியர்களை நியாமற்ற முறையில் உத்தரவிட்டதற்காக எச்சரித்து விடப்பட்டார் கவுர் . மறுபடியும் மார்ச் 13ஆம் தேதியன்று, அவருடைய மேலதிகாரி லாரா நவுல்ஸ், கவுரை அழைத்து, தொடரும் அவரின் மோசமான நடத்தை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதனால் மேலதிகாரிக்கு காப்பி போடும் பணி கவுருக்கு அளிக்கப்பட்டது. சம்பவத்தன்று, ஆர்டர் செய்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து, கவுர் எடுத்துவந்த காப்பியைக் குடித்த லாரா, சுவை சரியில்லை என்று எண்ணி, மீதியை கை கழுவும் தொட்டியில் கொட்டியுள்ளார். அப்போது, அதிலிருந்து சாம்பல்நிற உருண்டைபோல் தொட்டியில் படிந்ததையும் அவர் பார்த்துள்ளார்.
பின்னர், பணிக்குத் திரும்பிய லாராவிற்கு சிறிது நேரத்திலேயே, வயிற்று உபாதைகளும் உடல்நலக்குறைவும் ஏற்பட்டன. மருத்துவ பரிசோதனையில், அவரது வயிற்றில் படம் பிடிக்கப்பட்டது. அதில்,வயிற்றில் கலந்திருந்த படிமமும், கைகழுவும் தொட்டியில் காணப்பட்ட படிமமும், பாதரச ரசக்கலவை வகையினைச் சார்ந்தது என உறுதி செய்யப்பட்டது.
ரவீந்தர் கவுர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பல் சிகிச்சைக்கு உதவும் பாதரசக் கலவை தயாரிப்பது குறித்து, கவுருக்குத் தெரியும் என்பது நீதிமன்றத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது.
ஆயினும், தன்னைப் பற்றிய புகார்கள் மேலதிகாரிகளுக்கு சென்றுள்ளதால், அவர்கள் தனக்கு இப்படி ஒரு பிரச்சினையைக் கிளப்புகின்றார்கள் என்று கவுர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications