துவைக்காம, அயர்ன் பண்ணாம 100 நாளைக்கு இந்த சட்டையைப் போடலாமாம்...!
நியூயார்க்: அமெரிக்க கம்பெனி ஒன்று 100 நாட்கள் துவைக்காமல், அயர்ன் செய்யாமல் போடக் கூடிய சட்டை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இன்னைக்கு லுக்கா இருக்கும் சட்டை, நாளைக்கு அழுக்காக இருக்கும் என நகைச்சுவையாக கூறுவார்கள். ஆனால் 100 நாட்கள் வரை அணிந்தாலும் அழுக்காகாத சட்டை இருக்கிறதென்றால் ஆச்சர்யமாகத் தானே இருக்கும்.
அதிலும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு துவைப்பது ஒரு கஷ்டம் என்றால், அதை அயட்ர்ன் செய்வது அதை விடக் கஷ்டம். பல நாட்கள் துவைக்காத ஜீன்ஸ்ஸை பார்த்திருக்கிறோம். அதுபோல் சட்டையும் கிடைத்தால் டபுள் சந்தோஷம் தானே....

அழுக்கு சட்டை... அழகானது
சட்டைத் தயாரிப்பாளர்கள் சுருங்காத, வியர்வை படியாத சட்டை என இப்புதிய வரவு சட்டைக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

நோ நாற்றம்...
கடினமான உடற்பயிற்சிக்குப் பிறகு கூட அச்சட்டை பளிச்சென, நறுமணத்தோடு இருக்குமாம்.

மாடர்ன் சட்டை...
நவ நாகரீக இளைஞர்களுக்கான புதிய மாடல் சட்டையை தயாரிக்கும் முயற்சியில் உருவானது தான் இளநீலம் மற்றும் கருநீலம் கலந்த கட்டம் போட்ட இச்சட்டை என தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளது.

சட்டைக்கு நா கேரண்டி...
கசங்கல்,சுருக்கம், அழுக்கு இல்லாமல் பல நாட்களுக்கு இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

வாவ்... சூப்பர்
சட்டையை சோதிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சட்டையைப் பற்றி கூறும் போது, ‘சட்டை எப்போதும் ட்ரைகிளீனரில் இருந்து எடுக்கப்பட்டது போல் புத்துணர்ச்சியோடு இருக்கிறது' என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

கெமிக்கல் இல்லை...
உள்ளனுடன் காட்டனைக் கலந்து துணியை உருவாக்கும் போது, அது மற்ற துணிகளைக் காட்டிலும் 6 மடங்கு அதிகமாக, சாதாரணமாகவே எளிதில் அழுக்கு படியாத, சுருக்கமடையாததாகத் தான் அமையும். எனவே, இச்சட்டைக்காக நாங்கள் பிரத்யேகமாக எந்தவொரு கெமிக்கலையும் சேர்க்கவில்லை என நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

விளம்பரம் ரொம்ப முக்கியம்ல...
சட்டை கம்பெனியின் நிர்வாகி, அச்சட்டையை 100 நாட்கள் அணிந்து, பின் அதனை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தபோது, அவர்கள் ஆச்சர்யத்தில் பேசுவது போன்ற வீடியோ ஒன்றையும் விளம்பரமாக வெளியிட்டுள்ளனர்.

பொருத்தமான அளவு...
சரியான அளவில், கச்சிதமான காலரில் பட்டன்கள் போடும் வசதியோடு இருக்கும் இந்தச் சட்டை நிச்சயமாக எல்லாருக்கும் பிடிக்கும் என சட்டை தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications