போலீசுக்கு போன மூத்த மகன் குடும்பம்- தகராறை தீர்த்து வைத்த கருணாநிதி!

பிரச்சனை என்ன?
கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் மனைவியான சிவகாமசுந்தரி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு மனுவைக் கொடுத்திருந்தார். அதில், தாங்கள் குடியிருந்து வந்த கோபாலபுரம் வீட்டை மகன் அறிவுநிதி அபகரித்துக் கொண்டு வாடகைக்கு விட்டிருப்பதாகவும் அந்த வாடகை பணத்தை தராததால் தாங்கள் சிரமத்துக்குள்ளாகிறோம் என்றும் புகார் கூறியிருந்தார். தமது கணவர் மு.க. முத்துவை அறிவுநிதி மிரட்டுவதாகவும் அதில் கூறியிருந்தார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மு.க. முத்து மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தமது மனைவிக்கு மறதி நோய் என்றும் இதில் வேறு யாரும் தலையிட வேண்டாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
போலீஸ் நடவடிக்கை
ஆனால் இது தொடர்பாக மு.க. முத்துவிடம் சென்னை போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்திய போது, அறிவுநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் அறிவுநிதியை கைது செய்யவும் போலீசார் முடிவு செய்து மேலதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருந்தனர். அறிவுநிதியும் முன்ஜாமீன் கோரவும் முடிவு செய்ய திட்டமிட்டிருந்தார்.
கருணாநிதி தலையீடு
இந்த சூழலில் மு.க. முத்து, சிவகாமசுந்தரி, அறிவுநிதி ஆகியோரை கோபாலபுரம் வீட்டுக்கு கருணாநிதி வரவழைத்து பிரச்சனை குறித்து கேட்டிருக்கிறார். பின்னர் மு.க.முத்து- சிவகாமசுந்தரிக்கு மாதந்தோறும் குடும்ப செலவுக்கு குறிப்பிட தொகை தருமாறு அறிவுநிதியிடம் கூறியிருக்கிறார் அவர். இதை அறிவுநிதியும் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. கருணாநிதியின் இந்த சமாதான படலத்தைத் தொடர்ந்து அறிவுநிதி மீதான புகாரை அனேகமாக மு.க. முத்துவின் மனைவி திரும்பப் பெறலாம் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications