கர்நாடக சட்டசபை தேர்தல்: பாஜக கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவாரா எதியூரப்பா?

கர்நாடகத்தில் பாஜக தலைமையிலான அரசின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
ஒரு தொகுதி தவிர மற்ற 223 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்தலில் 2, 947 பேர் போட்டியிடுகின்றனர். இம்முறை வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், பி.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர். பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 222 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடிகின்றனர். கட்சிகள் தவிர 1,233 சுயேச்சைகள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 51, 648 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு 65,000 வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 4 கோடியே 36 லட்சத்து 14 ஆயிரத்து 915 வாக்காளர்கள் உள்ளனர்.
அதில் 35.5 லட்சம் பேர் இம்முறை தான் முதன்முதலாக வாக்களிக்கின்றனர். அதிகம் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் கர்நாடகத்தைச் சேர்ந்த 88,323 போலீசாரும், மத்திய போலீஸ் படை, மத்திய துணை ராணுவபடை, மத்திய பாதுகாப்பு படை, கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை, 1,200 வனத்துறை அதிகாரிகள், 14,000 ஊர்காவல் படை, ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களை சேர்ந்த போலீசார் உள்பட மொத்தம் 1.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எதியூரப்பா:
பாஜகவில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியை துவங்கிய முன்னாள் முதல்வர் எதியூரப்பா இத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதனால் லிங்காயத் சமூகத்தினரின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிய பாஜக அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் முனைப்பாக இருக்கிறது. இம்முறை கர்நாடகவில் காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என்று அது நம்பிக்கையோடு இருக்கிறது.
-
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications