சத்தீஸ்கரில் பக்கத்துவீட்டு குழந்தைகள் 3 பேரை கல்லால் அடித்துக் கொன்றவருக்கு தூக்கு
பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 மைனர் சகோதர, சகோதரிகளை கொன்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது ரத்னாபூர். அந்த ஊரைச் சேர்ந்தவர் ஷிவ்லால். அவருடைய குழந்தைகள் விஜய்(8), அஜய்(6) மற்றும் சாக்ஷி(4). கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி அந்த 3 குழந்தைகளும் பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது பக்கத்துவீட்டுக்காரரான மனோஜ் சூர்யவன்ஷி என்பவர் அவர்களை கடத்திச் சென்றார்.
அருகில் உள்ள வயலுக்கு அவர்களை கடத்திச் சென்று அங்கு வைத்து கல்லால் அடித்து அவர்களை கொன்றார். இந்த சம்பவம் நடந்த மறுநாள் சூர்யவன்ஷியை போலீசார் கைது செய்தனர். ஷிவ்லாலின் சகோதரர் ஷிவ்நாத்தை பழிவாங்க அவர் இந்த கொடூரத்தை செய்துள்ளார். தனது மனைவி ஷிவ்நாத்துடன் ஓடிப் போய்விட்டதாக நம்புவதால் அவர் இவ்வாறு செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிபதி நீதா யாதவ் சூர்யவன்ஷிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications