தமிழரசி வீட்டுக் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை
சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கதவை உடைத்து மொத்தம் 145 பவுன் நகைகளையும், பல லட்சம் பணத்தையும் திருடர்கள் அபகரித்துச் சென்ற செயல் மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.
சீர்காழியில் உள்ள தென்பாதி பகுதியில் வசித்து வருபவர் தமிழரசி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் அங்கிருந்த 100 பவுன் நகைகளையும், ரூ. 1.45 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இன்று காலைதான் இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல் தெரிய வந்தது. போலீஸார் இந்த துணிகர சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல என்ஜிஓ காலனியில் வசித்து வருபவர் பொறியாளர் சுரேஷ். இவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் அங்கிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ. 42 ஆயிரம் பணத்தை அள்ளிச் சென்றது.
நேரு நகரில் வசித்து வரும் ஒரு ஜோதிடர் வீட்டையும் திருடர்கள் விடவில்லை. வீடு புகுந்த திருடர்கள் அங்கிருந்த 30 பவுன் நகைகளையும், ரூ. 90 ஆயிரம் பணமும் திருடிச் சென்றனர்.
சீர்காழியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடர்கள் பல நூறு பவுன் நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற செயல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications