ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் 'அங்காடித்தெரு' காசி!
தூத்துக்குடி: தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் நடிகர் காசி. இவர் அங்காடித்தெரு, அரவாண் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து காசி தெரிவித்ததாவது, "கடந்த கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி காலை ஏற்பட்ட விஷ வாயு கசிவில் நானும் பாதிக்கப்பட்டேன்.எனது வீட்டின் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டனர். மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
மேலும் அப்பகுதியில் உள்ள மரங்களும், செடிகளும் கருகின. இதன் காரணமாக தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிற்சாலை தூத்துக்குடியில் இயங்கினால் வருங்கால சந்ததிகள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக குழந்தைகள், பெண்கள் பெருமளவில் கேன்சர் நோய் வந்து பாதிக்கப்படுவார்கள்.

எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி எவ்வித அரசியல், அமைப்புகள் தொடர்பில்லாமல் என்னுடைய சுய முயற்சியால வாக்காளர் குழு என்ற அமைப்பின் மூலம் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
இந்த இயக்கத்திற்கு தூத்துக்குடி நகர மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று 12 ஆயிரம் பேர் மனமுவந்து கையெழுத்திட்டுள்ளனர். 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று விட்டு இதன் நகல்களை தமிழக முதல்வர், பாரதப் பிரதமர், உச்சநீதிமன்றம்,தேசியபசுமைத்தீர்ப்பாயம் ஆகியோருக்கு அனுப்ப உள்ளேன்" என்றார் காசி.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications