இங்கிலாந்து: கத்தரிக்காயில் பிள்ளையார்.... இந்துக்கள் வழிபாடு
லண்டன்: சமையலுக்கு பயன்படுத்த வாங்கி வந்த கத்திரிக்காயில் ஒன்று யானை முக வடிவத்தில் விநாயகர் கடவுள் போன்று இருந்ததால் அதை மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லிசெஸ்டர் என்ற இடத்தை சேர்ந்த பிரபுல் விஸ்ராம் (61) என்ற தொழில் அதிபர், சமையல் தொழிலும் செய்து வருகிறார். இவர் சமையலுக்கு பயன்படுத்த வாங்கி வந்த கத்தரிக்காயில் ஒன்று யானை முக வடிவத்தில் விநாயகர் கடவுள் போன்று இருந்ததாம். அதை அவரது மனைவி ரேகா பார்த்து விஸ்ராமிடம் தெரிவித்துள்ளார்.
விஸ்ராம் குடும்பத்தினர் அந்த கத்தரிக்காயை பயபக்தியுடன் வணங்கினர். மேலும் அதை அருகில் இருந்த கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்துள்ளனர்.
இதற்கிடையே அதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியில் தங்கியிருக்கும் இந்துக்கள் திரளாக கோவிலுக்கு படையெடுத்தனர்.
நெரிசல்...
பக்தி பரவசத்துடன் அந்த கத்தரிக்காயை வணங்கி பூஜை செய்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பயபக்தியுடன்...
இதுகுறித்து தொழில் அதிபர் பிரபுல் விஸ்ராம் கூறும்போது, ''கத்தரிக்காயில் விநாயகர் உருவம் தெரிந்ததை என் மனைவி ரேகாதான் முதலில் பார்த்தார். உடனே நாங்கள் அதை பயபக்தியுடன் வணங்கி கோவிலுக்கு எடுத்து சென்றோம்.
எங்களுக்கு கிடைத்த ஆசி...
இந்த கத்தரிக்காய் எங்களுக்கு கிடைத்ததை மிகப்பெரும் ஆசியாக கருதுகிறோம். இது எங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் தரும் என நம்புகிறேன்'' என்றார்.
வழிபாடு...
விஸ்ராமும், அவரது குடும்பத்தினரும் அந்த கத்தரிக்காயை தினமும் 2 தடவை வணங்குகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications