For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஸ்டன் குண்டுவெடிப்பில் அல்-கொய்தாவுக்கு தொடர்பா?: போலீஸின் பிடியில் டமேர்லன் மனைவி

Google Oneindia Tamil News

நியூ யார்க்: பாஸ்டனில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி மனைவியின் கம்ப்யூட்டரில் அல்-கொய்தா பிரசுரங்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

கடந்த மாதம் பாஸ்டன் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய டமேர்லன் ட்சர்னேவ், போலீசாரின் தேடுதல் வேட்டையின் போது சுட்டுக்கொல்லப்பட்டான்.

குற்றவாளிகளில் இன்னொருவனான அவனது தம்பி டமேர்லன் டுசோக்கர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தனது அண்ணனின் வீட்டில் இருந்தபடியே வெடிகுண்டுகளை தயாரித்தாக கூறினான்.

அடுத்த கட்டமாக, வீட்டை போலீசார் சோதனையிட்ட போது சுட்டுக் கொல்லப்பட்ட டமேர்லன் ட்சர்னேவ்-வின் மனைவிக்கு சொந்தமான கம்ப்யூட்டர் 'ஹார்ட் டிஸ்க்' கில் அல்-கொய்தா இயக்கத்தின் செய்திகள், பிரசுரங்கள் மற்றும் பதிப்புகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து, ட்சர்னேவ்வின் மனைவி கேத்தரின் ருஸ்செல் மீது போலீசாரின் பிடி இறுகும் என கூறப்படுகிறது.

English summary
Investigators have discovered radical Islamic materials and an al Qaeda magazine on the computer of Boston Marathon bomber Tamerlan Tsarnaev's widow, and have also found explosive residue throughout their house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X