2ஜி வழக்கு: படுத்த படுக்கையாக இருக்கும் தயாளு அம்மாளுக்கு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி

2ஜி ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நேற்று டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று தயாளு அம்மா சார்பில் அவரது வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
88 வயதாகும் தயாளு அம்மாளுக்கு அல்சீமர்ஸ் எனப்படும் மறதி நோய் உள்ளது. இதற்காக அவர் கடந்த ஒரு ஆண்டு காலமாக சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் படுத்த படுக்கையாக உள்ளார். அப்படி இருக்கையில் அவரால் நீதிமன்றத்திற்கு வர முடியாது. நீதிமன்றம் விரும்பினால் ஒரு மருத்துவ குழுவை அனுப்பி தயாளு அம்மாளின் உடல் நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்க உத்தரவிடலாம்.
அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி இது குறித்து பதில் மனுவை செவ்வாய்க்கிழமை(இன்று) தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டார்.
2ஜி ஊழல் வழக்கில் 25-4-2011 அன்று சிபிஐ தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications