குடிகார கணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை
சேலம்: சேலம் அருகே கணவன் தொடர்ந்து குடிவிட்டு வந்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேலூர் பெருமாள் பாளையத்தைச் சேர்ந்தவர் கௌசல்யா(20). அவருக்கும் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (27) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடிப்பழக்கம் உள்ள கோவிந்தராஜ் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் கவலை அடைந்த கௌசல்யா இனிமேல் குடிக்கக் கூடாது என்று கணவரிடம் சத்தியம் வாங்கியுள்ளார். சத்தியத்தை மீறி கோவிந்தராஜ் கடந்த சில நாட்களாக குடித்துள்ளார். இதனால் கௌசல்யா மனமுடைந்தார். இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கௌசல்யா சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் உடல் மீது ஊற்றி தீ வைத்தார். அதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
திருமணமான மூன்றே மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications