தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஸ்டாலின் பேச்சு
விருதுநகர்: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. ராசனின் மகனும், உயர் நீதிமன்ற திமுக வழக்கறிஞருமான வி.பி.ஆர். இளம்பருதி-செல்வராணி திருமணம் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.
விழாவில் ஸ்டாலின் பேசியதாவது,
சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல முடியவில்லை. சட்டசபை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. கேள்வி நேரத்தில் ஒருவர் கேள்வி மட்டும் கேட்க முடியும். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள பதில் மட்டும் சொல்ல வேண்டும் என்பது ஜனநாயக விதி. ஆனால் தமிழக சட்டசபையில் கேள்வி சம்பந்தப்பட்டது ஒரு நிமிடம் என்றால் அம்மா, சும்மா, கம்மா என அம்மா புராணம் சொல்லவே 7 நிமிடம் ஆகிறது.
குடிநீர் பற்றி கேட்ட கேள்விக்கு அதற்கு பதில் சொல்பவர் அதற்கு புராணம் பாடி முடிக்க 10 நிமிடம், அதன்பின் பதில் சொல்லும் போது அம்மா நினைத்தால் வரும் என அமர்ந்து விடுவார். இது சட்டசபையா அல்லது கட்சி கூட்டமா என அவர்களுக்கே தெரியவில்லை. ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மின்சார தட்டுப்பாடு குறித்து சட்டசபையில் கேள்வி கேட்டால் தகுதி இல்லை என மின்சாரத் துறை அமைச்சர் பதில் கூறுகிறார்.
மின்சாரத் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு இது குறித்து பேசவே அருகதை இல்லை. மக்களுக்கு தினமும் 18 மணி நேரம் மின்சாரம் தராத அமைச்சருக்கு தகுதி இருக்கிறதா என நான் பதிலுரைத்தேன் என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications