அரசு பஸ்களில் ஏத்த மாட்டேங்கிறாங்க: கலெக்டரிடம் பார்வையற்றவர்கள் மனு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தங்களை ஏற்ற மறுக்கும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்வையற்றவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர் கலெக்டர் ஆசிஷ் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,
பார்வையற்றவர்களான நாங்கள் மாற்றுத் திறனாளிகள் என்பதற்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ளோம். இந்த அட்டையை புதுப்பிக்க தேவையில்லை என்று எங்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பார்வையற்றவர்களான எங்களை அரசு பேருந்துகளில் கண்டக்டர்கள் ஏற்றுவதே இல்லை. அப்படியே நாங்கள் மற்றவர்களிடம் கேட்டு ஏறினாலும் இந்த பேருந்து அங்கு போகாது என்று சொல்லி எங்களை இறக்கிவிட்டு செல்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளான நாங்கள் அதற்கான அடையாள அட்டைகளை வைத்திருந்தபோதும் எங்களுக்கு அரசின் சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. அரசு பேருந்துகளில் எங்களால் பயணிக்க முடியவே இல்லை. எங்களை அரசு பேருந்து கண்டக்டர்கள் மற்றவர்கள் முன்பாக கண்டபடி திட்டுவது மனதை பாதிக்கிறது என்று அதில் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications