கூண்டுக் கிளியா சிபிஐ? சுதந்திரமா செயல்பட விடலைன்னா....: மத்திய அரசை 'வறுத்த' சுப்ரீம் கோர்ட்!

Subscribe to Oneindia Tamil

CBI
டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அறிக்கையை திருத்திய விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்வதற்கு முன்பாக சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், பிரதமர் அலுவலக அதிகாரிகள், தலைமை வழக்கறிஞர் ஆகியோர் சில திருத்தங்களை செய்த விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் திருத்தம் செய்தார் என்பதை ஒப்புக் கொண்டு சிபிஐ இயக்குனர் மன்னிப்பு கோரி தாக்கல் செய்திருந்த அறிக்கை மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

"சிபிஐ என்ற அமைப்பின் வேலை விசாரணை நடத்துவதுதானே தவிர மத்திய அரசு அதிகாரிகளுடன் விவாதித்துக் கொண்டிருப்பது அல்ல...மத்திய அமைச்சர்கள் தங்களது துறை தொடர்பான சிபிஐயின் விசாரணையை அறிக்கையைப் பார்வையிடலாம்.. ஆனால் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விவகாரங்களில் தலையிடக் கூடாது. விசாரணை வளையத்தில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சிபிஐ விசாரணையில் தலையிட முடியும்? கடந்த மார்ச் 7-ந் தேதியன்று இரவு சிபிஐ அலுவலகத்தில் நிலக்கரி துறையின் இணை செயலர், பிரதமர் அலுவலகத்தின் இணை செயலர் ஆகியோருக்கு என்ன வேலை?

சிபிஐ ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக இருக்கு.. சிபிஐ அமைப்புக்கு நிறைய எஜமானர்கள் இருக்கிறார்கள்... அவர்கள் பேச்சைக் கேட்டு நடக்கும் கிளிப்பிள்ளையாக சிபிஐ இருக்கிறது.... சிபிஐ சுதந்திரமாக செயல்படும் என்பதை மத்திய அரசு உறுதி செய்தால் நாங்கள் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கமாட்டோம். அப்படி இல்லை எனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் ." என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது.

ஆனால் சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் சிபிஐயுடனான கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தார். நான் சிபிஐயிடம் வரைவு அறிக்கையைக் கேட்கவில்லை என்று அட்டர்னி ஜெனரல் வாகன்வதி உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்தார்.ஆனால் இதை நிராகரித்த உச்சநீதிமன்றம் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீன் ராவல் ஆகியோரையும் இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

மத்திய அரசை உச்சநீதிமன்றம் அண்மைக்காலத்தில் தற்போதுதான் இவ்வளவு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+