3 மாசமாகியிருச்சு... இன்னும் ஏன் நீக்கலை- கொந்தளித்த ஜெத்மலானி!

பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக, நிதின் கட்காரி இருந்த போது அவருக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியவர் ராம்ஜெத்மலானி. அதேபோல் நரேந்திர மோடியைத்தான் பிரதமர் வேட்பாளராக்க அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் அவர் பாஜகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் பதில் அளித்திருந்தார். இதன் பின்னர் ராம்ஜெத்மலானி அமைதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் அத்வானி தலைமையில் அவரது வீட்டில் நடைபெற்றது. இதில் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். அப்போது திடீர் என்று ராம்ஜெத்மலானி வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிரான ஊழல் புகார்களில் பாரதிய ஜனதா தீவிரம் காட்டாமல் இருப்பது ஏன்? என்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினீர்கள். 3 மாதம் ஆகி விட்டது. நானும் பதில் கொடுத்து விட்டேன். என்னை ஏன் இன்னும் கட்சியில் இருந்து நீக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு வெளியேறினார்.
இதைத் தொடர்ர்ந்து மற்ற பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ராம்ஜெத்மலானியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான அறிவிப்பு அனேகமாக இன்று வெளியாகலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications