ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 30 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கும் வரும் 20-ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு பரிந்துரை கடிதம் வழங்கியிருந்தது.

அதனடிப்படையில், ராமேஸ்வரம் மீனவர்களை இன்று தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 30 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

காரைக்கால் மீனவர்கள்

இதற்கிடையில், யாழ்ப்பாணம் சிறையிலுள்ள 26 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, காரைக்கால் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+