தஞ்சை தேமுதிக மாணவர் அணி துணை செயலாளருக்கு கல்தா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி கே.எஸ். பாரதிமோகன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேமுதிக தஞ்சாவூர் நகர மாணவர் அணி துணை செயலாளராகவும், 51வது வார்டு செயலாளராகவும் செயல்பட்டு வந்த கே.எஸ். பாரதிமோகன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சி பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
இவருடன் கட்சி தொண்டர்கள் யாரும் கட்சி சம்பந்தமாக எந்தவிதமான தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications