1984ல் டெல்லியில் 5 சீக்கியர் கொலை வழக்கு- 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

டெல்லியில் 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி சீக்கிய பாதுகாவலர்களால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் முக்கியமானதாக கருதப்படுவது டெல்லியில் 5 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குதான். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன்குமார் உள்ளிட்டோர் 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கடந்த 30-ந் தேதியன்று சஜ்ஜன்குமாரை மட்டும் விடுவித்த டெல்லி உயர்நீதிமன்றம் மற்ற 5 பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதனால் நாடாளுமன்றத்தை அகாலி தள கட்சியின் எம்.பிக்கள் முடக்கினர். டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் சீக்கியர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்றைய விசாரணையின் போது சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட பல்வான் கோகர், கிர்தாரிலால் மற்றும் கேப்டன் பஹ்மால் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. எஞ்சிய இருவரான மகேந்தர் யாதவ், கிஷன் கோக்கர் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications