பெங்களூரில் நல்லா சாப்பிட்டு, சாப்பிட்டு பருமனால் அவதிப்படும் செல்லங்கள்
பெங்களூர்: பெங்களூரில் செல்லப் பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகள் கூட உடல் பருமனால் அவதிப்படுகின்றன.
ஐடி தலைநகரமான பெங்களூரில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினியர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் உடல் பருமன் ஐடி ஊழியர்களுக்கு மட்டுமல்ல பெங்களூரில் உள்ள செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கும் உள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால் பருமனான செல்லப் பிராணிகளின் தலைநகராக பெங்களூர் மாறிவிடும்.
பெங்களூரில் ஆளாளுக்கு காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு சுற்றுவதால் அவர்களுக்கே உடற் பயிற்சி செய்ய நேரமில்லை. இதில் அவர்கள் எங்கே செல்லப் பிராணிகளை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள்.

குண்டடிக்கும் செல்லங்கள்
செல்லப் பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ஒரு குடும்பத்தில் ஆளாளுக்கு உணவளிக்கின்றனர். மற்ற குடும்ப உறுப்பினர் உணவளித்திருப்பார்கள் என்று கூட நினைக்காமல் ஆளாளுக்கு உணவு கொடுப்பதால் செல்லப் பிராணிகள் ஓவராக சாப்பிட்டு குண்டாகிவிடுகின்றன.

உடற்பயிற்சி இல்லை
செல்லப் பிராணிகளான நாய்களும், பூனைகளும் நன்றாக சாப்பிட்டு, சாப்பிட்டு வீட்டுக்குள்ளேயே சொகுசாக உட்கார்ந்து கொள்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது. அவைகளை உரிமையாளர்கள் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வதில்லை. இதனால் நாய்கள் மட்டுமின்றி பூனைகளும் உடல் பருமனால் அவதிப்படுகின்றன. அதே நேரம் டாபர்மேன் போன்ற சில நாய்களுக்கு உடல் பருமன் பிரச்சனை ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காலையும், மாலையும் வாக்கிங்
செல்லப் பிராணிகளை கண்டிப்பாக காலையிலும், மாலையிலும் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வதுடன் அவற்றுக்கு கட்டுப்பாடாக உணவு அளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications