தர்மபுரி கலவரம்: 5 பேர் கொண்ட விசாரணை குழுவை நியமித்த தமிழக அரசு
சென்னை: தர்மபுரி வன்முறை சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
தர்மபுரியில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து தர்மபுரி அருகே உளள நாயக்கன்கொட்டாய், நத்தம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெடித்தது. தலித் மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையால் பல வீடுகள் எரிந்தது சாம்பலானது. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம் அடைந்தது.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து அரசு நிவாரணம் வழங்கியது. இந்த மோதல் தொடர்பாக ஒரு குழு அமைத்து விசாரணையும் நடத்தியது.
தற்போது தர்மபுரி கலவரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வேளாண் துறை கூடுதல் செயலாளர் வாசுகி, கால்நடைத்துறை இயக்குனர் பழனிசாமி, சேலம் ஆர்.டி.ஓ. சதீஷ், ஆத்தூர் ஆர்.டி.ஓ. பொன்முத்துராமலிங்கம், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. மனோகரன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
கலவரம் நடந்த இடங்களில் இந்த குழு விரிவான விசாரணையை நடத்தி,அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications