தமிழ்த் தங்கம்... தமிழில் கள்ளக்குறிச்சி சிந்துஜா முதலிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிளஸ்டூ தமிழ்ப் பாடத்தில் கள்ளக்குறிச்சி மாணவி சிந்துஜா 199 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தார்.

வழக்கமாக தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு 200க்கு 200 மதிப்பெண் கொடுக்கப்படுவதில்லை. எனவே அதில் யாருமே சதம் போட முடியாத நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் இந்த வருட பிளஸ்டூ தேர்வில் தமிழ்ப் பாடத்தி்ல் கள்ளக்குறிச்சி மாணவி சிந்துஜா 199 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்தவர் ஆவார்.

சென்னை பிரெஞ்சில் முதலிடம்

சென்னை ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி காவ்யா பிரெஞ்சுப் பாடத்தி்ல முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவர் எடுத்த மதிப்பெண் 192 ஆகும்.

ஆங்கிலத்தில் சிங்காநல்லூர் ரங்கா

ஆங்கிலப் பாடத்தில் கோவை சிங்காநல்லூர் மாணவர் ரங்கா 197 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தார்.

விலங்கியலில் தனலட்சுமி

விலங்கியல் பாடத்தில் சிவகாசி மாணவி தனலட்சுமி 198 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

புள்ளியியலில் சாந்தா

சென்னை அகோபில மட பள்ளி மாணவி சாந்தா புள்ளியியல் பாடத்தி்ல 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+