காயத்தால் அனுதாப ஓட்டு நிச்சயம்... படுத்துக் கொண்டே ஜெயிப்பார் இம்ரான் கான்: அரசியல் நிபுணர்கள்

அச்சுறுத்தல்களுக்கிடையே, பாகிஸ்தானில் வரும் 11-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் செய்வதற்காக சென்ற போது, டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் லாகூர் மேடையில் இருந்து விழுந்து காயம் அடைந்தார். தலைகீழாக விழுந்ததால் இம்ரான் கானின் தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
சவுக்கத் கானம் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்தில் உள்ள எலும்பு மற்றும் முதுகெலும்பில் லேசான முறிவு ஏற்பட்ட போதிலும் அவர் விரைவில் பூரண குணமடைந்துவிடுவார் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கானுக்கு தலையிலும் பட்ட காயத்தினால் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில், மண்டையோட்டு எலும்பு பாதிக்கப்படவில்லை எனவும் , எனினும் அவருக்கு பரிசோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்தாலும், அங்கிருந்தபடியே தொலைபேசி மூலம், ஓரிரு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று அவரது கட்சி தலைவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் இருப்பதால் இம்ரான் கானுக்கு அனுதாப ஓட்டுகள் அதிகம் கிடைக்கும் என்று சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் நவாஸ் ஷெரிப் கட்சி அதிக இடங்களைப் பிடிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவித்த போதும், மிகவும் பிரபலமான பஞ்சாப் மாகாணத்தில், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் இம்ரான்கானை ஆதரிப்பதாக தெரியவந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications