தண்டனை ரத்து கோரிய சஞ்சய்தத் மனு- சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி! மே 15- ல் சரணடைய உத்தரவு!!

மும்பையில் 1993ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பின்போது சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து. பின்னர் அந்த தண்டனை உச்சநீதிமன்றத்தில் 5 ஆண்டாக குறைக்கப்பட்டது. இருப்பினும் ஒன்றரை ஆண்டுகள் ஏற்கனவே சிறையில் இருந்ததால் மூன்றரை ஆண்டுகாலம் சிறையில் இருக்க வேண்டும் என்றும் இதற்காக அவர் சரணடைய கால அவகாசமும் உச்சநீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டது.
இதனிடையே தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையையே ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை சஞ்சய் தத் தாக்கல் செய்திருந்தார். சஞ்சய்தத் தாக்கல் செய்த மனுவுடன் தண்டனை விதிகக்ப்பட்ட மேலும் 6 பேரின் மறு ஆய்வு மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தது. சஞ்சய்தத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது தண்டனையை ரத்து செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்படக் கூடிய காரணம் எதுவும் இல்லை. இதனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர் மே 15-ந் தேதி சரணடைந்து சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதேபோல் தண்டனை ரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட இதர மறு ஆய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் சஞ்சய்தத் சிறைத் தண்டனையை அனுபிவித்தாக வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications