இலங்கையில் சிறுநீரகம் அறுக்கப்பட்டு தமிழர்கள் படுகொலை! திடுக்கிடும் புகார்

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 29 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பொழுது, இடுப்பின் மேல் பகுதியில் ஆபரேசன் செய்யப்பட்டு இருந்தது. இது பற்றி மருத்துவமனையில் கேட்டதற்கு எந்த தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதேபோன்று இந்த வாரம் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தமிழ் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அப்பெண்ணின் உடலை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உறவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அவரது உடலில் இருந்த இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சிகிச்சை மூலம் நீக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லும் தமிழர்களின் உடல் உறுப்புகளை ஆபரேசன் மூலம் அகற்றி கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே கொத்து குண்டுகளை வீசியும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சம் புகுந்த தமிழர்களை அழித்த இலங்கை ராணுவம், தற்போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் தமிழர்களை கொலை செய்து வருகிறது என்கின்றனர் அங்கு உயிர் பயத்தில் வாழும் தமிழர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+