திருமண ஆசையில் மணக்கோலத்தில் வந்த காதலியை கற்பழித்துவிட்டு காதலன் ஓட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திருமண ஆசை காட்டி காதலியை கற்பழித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சிறுகுடி கிராமத்தைச் சேர்வர் பழனியாண்டி(27). அவரும் அதே பகுதியைச் சேர்ந்த தனலெட்சுமி(25) என்பவரும் ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு 2 பேரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் அவர்கள் காதலித்து வந்தனர். பழனியாண்டி தனலெட்சுமியிடம் உன்னைத் தான் திருமணம் செய்வேன் என்று அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் தனலெட்சுமி தனது காதலனிடம் என்னை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று பழனியாண்டி தனலெட்சுமிக்கு போன் செய்து இன்று நாம் திருமணம் செய்து கொள்வோம், உடனே கிளம்பி வா என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு குஷியான தனலெட்சுமி பட்டுப்புடவை கட்டி மணக்கோலத்தில் சென்று காதலனை பார்த்துள்ளார். இருவரும் நீண்டநேரம் மனம்விட்டு பேசியுள்ளனர். அதன் பிறகு பழனியாண்டி தனலெட்சுமியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஓடிவிட்டார்.
இதையடுத்து தனலெட்சுமி வடமதுரை போலீசில் பழனியாண்டி தனக்கு திருமண ஆசை காட்டி கற்பழித்துவிட்டதாக புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான பழனியாண்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications