கோவையில் 1.4 கிலோ தங்கம் கொள்ளை வடமாநில தொழிலாளர்கள் கைவரிசை
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் உள்ள ஒரு தங்க நகைப் பட்டறையில் 1.4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள தங்க நகைப்பட்டறையில் நேற்று 1.4 கிலோ தங்கநகையைக் காணவில்லை என்று பட்டறை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். நகை காணாமல் போன பின்னர் அந்த பட்டறையில் வேலை பார்த்த 7 பேரை காணவில்லை. அவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.
தங்கத்தை அந்த தொழிலாளர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போலீசார் தலைமறைவான 7 மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை தேடி வருகின்றனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நகைப்பட்டறையில் வேலை செய்த தொழிலாளர்களே தங்கத்தை திருடிச் சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications