மகாசேன் மழை வரப்போகுதோ?.. வெயில் குறைந்து சிலுசிலுக்குது சென்னை!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெயில் சடசடவென குறைந்து புழுக்கம் தணிந்துள்ளது. மகாசேன் புயலால் மழை வருமோ என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இருப்பினும் அடுத்த 2 நாட்களுக்கு வட மாவட்டங்களில் அணல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் மகாசேன் என்ற புதிய புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் புயலானது சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 1200 மைல்களுக்கு அப்பால் உள்ளது.

Summer heat comes down in Chennai drastically

இது மேலும் வீறுகொண்டு நகர்ந்து வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடும் வெயில் அடித்துவரும் தலைநகர் சென்னை மற்றும் கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் குறைந்து காணப்படுகிறது. சென்னையில் காலையிலிருந்தே வெயில் பெரியஅளவில் இல்லை. குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் மதியத்தி்ற்கு மேல் குளுமையான சூழல் நிலவி வருகிறது. லேசான காற்றும் வீசி வருகிறது.

மகாசேன் புயலால் மழை வரலாமோ என்றஎதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். வெயில் நன்றாக குறைந்து காணப்படுவதால் மக்கள் சற்றே புழுக்கம் குறைந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

அணல் காற்று வீசும்

இதற்கிடையே, வானிலை ஆய்வு மையத் தகவல் ஒன்று கூறுகையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாவட்ங்களில் ஒரு சில இடங்களில் வருகிற 13ம் தேதிக்குள் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

வடக்கு தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு அணல் காற்று வீசும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பொறுத்திருந்து பார்க்கலாம், மழை வருகிறதா அல்லது அணல் காற்று வீசுகிறதா என்பதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+