ராகுல் காந்திக்கு 'ப்ரீ' பேப்பர் கொடுத்த சிறுவனை தத்தெடுத்த காங்கிரஸ்
போபால்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, இலவசமாக செய்தித்தாளை கொடுத்த 10 வயது போபால் சிறுவனை தத்தெடுத்துள்ளது மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சி.
போபாலைச் சேர்ந்தவன் கெளஷல். 5ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஏப்ரல் 25ம் தேதி போபால் வந்த ராகுல் காந்தி, கெளஷலை அணுகி செய்தித்தாள் வாங்கினார். பின்னர் 1000 ரூபாய்த் தாளை அவனிடம் நீட்டினார். ஆனால் கெளஷல் அதைரப் பெற மறுத்தான்.என்னிடம் சில்லறை இல்லை. பேப்பரை ப்ரீயாகவே தருகிறேன். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டான்.
இதனால் ஆச்சரியமடைந்த ராகுல் காந்தி, அவனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினார்.
இந்த நிலையில்,தற்போது அந்த சிறுவனை மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தத்தெடுத்துள்ளது. அவனை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கெளரவித்த காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் கட்சி அவனை தத்தெடுப்பதை அறிவித்தனர்.
அந்த சிறுவனுக்கு கட்சி சார்பில் மாதம் ரூ.1000 வழங்கப்படுமாம். மேலும் அவனது படிப்புக்கும், அவனது கனவான டாக்டராகும் ஆசையையும் காங்கிரஸ் நிறைவேற்றும் என்று அறிவித்துள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் சஜீத் அலி, கெளஷலின் தந்தைக்கு, அவர் நடத்தி வரும் கல்லூரியில் பியூன் வேலை தருவதாக உத்தரவாதம் அளித்தார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications