ஆணையும், பெண்ணையும் தனியாக விட்டால் செக்ஸ் வச்சுக்காம வேற என்ன செய்வாங்க.. கோர்ட்டில் நீதிபதி பேச்சு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஒரு கோர்ட்டில், நடந்த விசாரணையின்போது மாஜிஸ்திரேட் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆணையும், பெண்ணையும் ஒரு அறைக்குள் தனியாக விட்டால் உடலுறவுதான் வைத்துக் கொள்வார்கள். வேறு என்ன செய்வார்கள் என்று அவர் பேசினார்.
மாஜிஸ்திரேட்டின் இந்தப் பேச்சுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த மாஜிஸ்திரேட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. இதுதொடர்பான அப்பீல் வழக்கில்தான் தற்போது மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து தண்டனை விதிக்கபப்பட்ட நபரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
சரி நடந்தது என்ன....?

வாட்ச்மேன் காட்டு ராஜா
காஞ்சிபுரம் மாவட்டம் காரணைத் தங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் அங்குள்ள பேக்டரியில் வேலை பார்த்தார். அதே பேக்டரியில் வாட்ச்மேனாக இருந்தவர் காட்டுராஜா.

கற்பழிப்பு - கொலை
கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் மகேஸ்வரி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காட்டுராஜாவை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது காஞ்சிபுரம் 2வது செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

ஆயுள் தண்டனை
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், கற்பழிப்பு மற்றும் கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் காட்டு ராஜாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தனியா விட்டால் வேறு என்ன செய்வாங்க...
தீர்ப்பை அறிவித்த மாஜிஸ்திரேட் சொன்ன கருத்துதான் பரபரப்பை ஏற்படுத்தியது.. மாஜிஸ்திரேட் கூறுகையில், ஒரு ஆணையும், பெண்ணையும் தனியாக விட்டால் நிச்சயம் உடலுறவு கொள்ளத்தான் செய்வார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரும், கொலையான பெண்ணும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது குற்றவாளி செக்ஸ் தேவைக்காக அந்தப் பெண்ணை அணுகியிருக்கலாம், அவர் மறுத்திருக்கலாம். இருப்பினும் அவர்களுக்குள் உடலுறவு நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து மீண்டும் அப்பெண்ணை குற்றவாளி அணுகியிருக்கலாம். அதற்கு அவர் மறுத்திருக்கலாம். இது கடைசியில் கொலையில் போய் முடிந்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.

அப்பீல் செய்த காட்டு ராஜா
இந்தத் தீர்ப்பை எதிர்த்து காட்டு ராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.

உயர்நீதிமன்றம் கண்டனம்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, நாகமுத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச், காட்டு ராஜாவுக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து காட்டுராஜாவை விடுதலை செய்ய உத்தரவிட்டது. மேலும் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட்டின் பேச்சுக்கும் கண்டனம் தெரிவித்தது.

இப்படியா பேசுவது
நீதிபதிகள் கூறுகையில், ஒரு ஆணும், பெண்ணும் தனியாக இருந்தால் அப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று எப்படி ஒரு கோர்ட் முடிவுக்கு வர முடியும். மாஜிஸ்திரேட்டின் கணிப்பு தவறு என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.












Click it and Unblock the Notifications