வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம்: வேளச்சேரி, மாதவரம் கதி என்ன? கேட்கிறார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து இன்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 1985ம் ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவைத் திறந்து வைத்த அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர், இனிமேல் இங்கு நிலம் கையகப்படுத்தப்படமாட்டது என்று வாக்குறுதி அளித்தார்.
தற்போது சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
அப்படியென்றால், கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டு 80 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்ட வேளச்சேரி, மாதவரம் புறநகர் பேருந்து நிலைய திட்டங்கள் என்னவாகும் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று கருணாநிதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications