மே 18-ம் தேதி கடலூரில் நாம் தமிழர் கட்சியின் 4-ம் ஆண்டு விழா - சீமான் அறிவிப்பு

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த விழாவில், வெளிமாநிலங்களிலிருந்து முக்கிய இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இயக்குநர் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தொடங்கி 3 ஆண்டுகள் முடிவடைந்து 4-ஆம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி வருகிற 18-ந் தேதி கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் விழா கொண்டாடப்படுகிறது.
அன்று காலை 10 மணிக்கு கடலூர் டி.வி.என். திருமண மண்டபத்தில் ‘வீழ்வோம் என்று நினைத்தாயோ' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
மாலையில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும், பல முக்கிய தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
இதுகுறித்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் சீமான் கூறுகையில், "மதத்தால், சாதியால் பிரிந்து கிடந்த தமிழர்களை, உணர்வால் தமிழராக ஒன்றிணைக்கத்தான் இந்த இயக்கத்தை, தமிழர் இனப்படுகொலை நடந்த துயர தினமான மே 18-ம் தேதி தொடங்கினோம்.
எமக்கென்று ஒரு அரசியல் பலம் வேண்டும். அப்போதுதான் நம் கோரிக்கைகளை பலமாக எதிரொலிக்க முடியும் என்ற உணர்வால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி, இப்போது மூன்றாம் ஆண்டை பூர்த்தி செய்துள்ளது.
நாம் தமிழர் கட்சியை முதலில் சி.பா.ஆதித்தனார் தொடங்கினார். அவர் தொடங்கியதை நாங்கள் புதுப்பித்து சிறப்பாக நடத்தி வருகிறோம்.
இந்த நான்காம் ஆண்டு விழாவில் இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.
வெளி மாநிலங்களில் எங்கள் இயக்கத்தைப் போல மொழிக்காகவும் இனத்துக்காகவும் போராடும் பல இயக்கங்களின் முக்கிய தலைவர்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். அவர்கள் யாரென பெயரைச் சொன்னால் வராமல் தடுத்துவிடும் அபாயமிருக்கிறது.
ஆரம்பத்தில் தான் சார்ந்த சாதிதான் பெரிது என நினைத்து பிரிந்து கிடந்த தமிழ்ச் சமூகம், சமீப காலம் வரை சாதியை ஓரளவு மறந்திருந்தது. ஆனால் இப்போது மீண்டும் தர்மபுரி, மரக்காணம் என சாதிக் கலவரங்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. இது வேதனைக்குரியது. இந்த நிலை மாறும். தமிழன் சாதியைத் தாண்டி தமிழ் தேசியத்தை நோக்கி வருவான் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications