பாட்டு பாடியதால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு கீழே இறக்கிவிடப்பட்ட பெண்
லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்தில் சென்ற பெண் ஒருவர் நிறுத்தாமல் பாட்டு பாடியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு அவர் கீழே இறக்கிவிடப்பட்டார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நியூயார்க் நகருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த 9ம் தேதி கிளம்பியது. அந்த விமானத்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான விட்னி ஹூஸ்டனின் ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ உள்ளிட்ட பாடல்களை பாடிக் கொண்டே இருந்தார். அவர் நிறுத்தாமல் பாடிக் கொண்டே வந்தது சக பயணிகளை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
இதையடுத்து விமானம் அவரசரமாக கன்சாஸ் சிட்டியில் தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த இளம்பெண் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். அவரை மீண்டும் விமானத்தில் ஏற்றி நியூயார்க்கில் இறக்கிவிட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மறுத்துவிட்டது.
அந்த பெண்ணை விமானத்தில் இருந்து 3 அதிகாரிகள் கீழே இறக்கிவிட்டதை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications