அதிமுக ஆட்சி நீடிக்காது... கருணாநிதி சாபம்

அதிமுக ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடிக்காது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிடக் கோரி மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்றகோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் நேற்று திமுக எழுச்சி நாளாக நடத்தப்பட்டது. இதையொட்டி சென்னையில்நடந்த பொதுக் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சேது சமுத்திர திட்டம் திமுகவின் முயற்சியால் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறுத்தியது மத்திய அரசு அல்ல. திமுகவுக்கு பெயர் வந்துவிடும் என்ற நோக்கத்தில், இதனை அதிமுக அரசு முடக்க முயல்கிறது.
இருண்ட தமிழகம். இருள் நிறைந்த தமிழகம். இருள் நிறைந்த தமிழகத்திலே இன்றைக்கு நாம் இருக்கின்றோம். தமிழ்நாட்டில் அமைதி இல்லை.
எங்கும் அமளி. காலையில் ஒரு கொலை, பிற்பகலிலே ஒரு கொலை, மாலையிலே ஒரு கொலை, அந்த பிணத்தை எடுத்து புதைப்பதற்குள்ளாக இரவியே ஒரு கொலை என்ற செய்தி பத்திரிகைகளில் தினசரி வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த அதிமுக ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடிக்காது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்திவிட்டு, தற்போது அரசு அமைந்ததும் அதனை எதிர்ப்பது ஏன்? 1860ம் ஆண்டு காலம் தொடங்கி, ஆங்கிலேயர் காலம் தொட்டு சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டுவிட்டது.
சேதுசமுத்திர திட்டத்தை முடக்க எண்ணி, உச்சநிதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் கூட்டம் தான் இந்த எழுச்சி நாள் கூட்டம். இது தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் பிரச்சனை. அவர்களின் தலையில் கை வைக்காதீர்கள் என்று ஜெயலலிதா அவர்களை தமிழக மக்களின் எதிர்காலம் இருள் மயமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக கேட்டுக்கொள்கிறேன். இந்த திட்டத்தை தடுக்காதீர்கள்.
இந்த கூட்டம், ஜெயலலிதாவை பார்த்து உச்சநிதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற வேண்டும் என்பதற்கான கூட்டம். நான் சொன்னால் கேட்பார்களா. கேட்க கூடிய காலம் வரும். சேது சமுத்திர திட்டம் நிச்சயமாக நமக்கு கிடைக்கும் என்றார் அவர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications