அழகிரி ஆபீஸை வங்கிக்கு வாடகைக்கு விடப் போறாங்களாம்...!
மதுரை: மு.க. அழகிரியின் எம்.பி. அலுவலகமாக செயல்பட்டு வந்த இடத்தை கையகப்படுத்திய மாநகராட்சி தற்போது அதனை வங்கிக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது.
மதுரை மேல மாரட் வீதியில் மாநகராட்சி மண்டல அலுவலகம் புதிதாக கட்டப்பட்ட போது அதன் கீழ் தளத்தை மு.க.அழகிரியின் எம்.பி. அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மதுரை மாநகராட்சியையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.
அதன்பிறகு அந்த அலுவலகத்தை அழகிரி பயன்படுத்தாமல் வைத்திருக்கிறார் என்று கூறி, அந்த அலுவலகத்தை மதுரை மாநகராட்சி கைப்பற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு டயாலசிஸ் மையமாக மாற்றி அமைக்கப் போவதாக சொன்னது. அதற்காக கடந்த 2012 ஏப்ரல் 25ஆம் தேதி மதுரை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றி அலுவலகத்தையும் கைப்பற்றினார்கள். ஆனால், இதுவரையில் அவர்கள் சொன்னபடி அங்கே டயாலிசிஸ் மையம் அமைக்கவில்லை.
ஓராண்டாக அந்த கட்டிடம் பயன்பாடின்றி சும்மாவே கிடந்தது. சொன்னபடி மருத்துவ மையம் அமைக்க முடியாததற்குக் காரணங்களை அடுக்கியுள்ள மாநகராட்சி நிர்வாகம், தற்போது அந்த இடத்தை வங்கிக்கோ அல்லது ஏதேனும் ஒரு அரசு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications