மாலையில் கரையை கடக்கும் மகாசேன் : வங்காள தேசத்தில் 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
டாக்கா: இன்று மாலை மகாசேன் புயல் வங்காளதேசத்தில் கரையை கடக்க இருப்பதால் கடற்கரை ஓரத்தில் வசித்து வந்த 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான மகாசேன் புயல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று முதலில் அஞ்சப்பட்டது. ஆனால் மகாசேன் புயல் கொஞ்சம் வலுவிழந்து வடகிழக்கு பகுதி வழியாக வங்காளதேசத்தை நோக்கி நகர்ந்து சென்றது.
புயல் தாக்கும்போது பெரும் காற்றுடன் கனமழை பெய்யுமாதலால் வங்காள தேசத்தில் சிட்டகாங் மாவட்டம் மற்றும் கோக்ஸ் பஜார் பகுதியில் 40 லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வங்காள தேசத்தில் 15 மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் வசித்து வரும் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிட்டகாங் துறைமுகம் பகுதியில் 30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சிட்காங் துறைமுகமும், கோக்ஸ் பஜார் ஏர்போர்ட்டும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. புயல் தாக்குவதை அடுத்து இன்று இரவும் நாளை வடக்கு மியான்மர் மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications