தூத்துக்குடி அனல் மின்நிலையம்- 2வது யூனிட்டிலும் பழுது! மின் உற்பத்தி பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்கெனவே 3வது யூனிட் பாய்லர் பழுதடைந்துள்ள நிலையில் இன்று காலை 2வது யூனிட் பாய்லரும் பழுதடைந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1050 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் 5 யூனிட்கள் இயங்கி வருகின்றன. இதில் ஏற்கெனவே 3வது யூனிட் பாய்லரில் சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பாய்லரை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு 2 வது யூனிட் பாய்லரிலும் பழுது ஏற்பட்டது. இதனால் மேலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 2வது, 3வது யூனிட் பாய்லரை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications