ஆச்சரியம்... 49 சாவடிகளில் 100 சதவீதத்தை தாண்டிய ஓட்டுப்பதிவு: பாகிஸ்தான் தேர்தலில் காமெடி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தலில் 49 சாவடிகளில் 100க்கும் அதிகமான சதவீதத்தில் வாக்காளர்களை விட வாக்கு வாக்கு பதிவு இருந்ததைக் கண்டு தேர்தல் ஆணையர்களுக்கு மயக்கமே வந்து விட்டதாம்.
பல்வேறு மிரட்டல்களுக்கிடையே, கடந்த 11ம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பிரதமராக 3வது முறை நவாஸ் பதவியேற்க உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 8,119 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 49 சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட, அதிகமாக வாக்குப் பதிவு நடந்துள்ளதால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்தலின் போது கள்ள ஓட்டு போடப்பட்டது, பல வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அதிக வாக்குகள் பதிவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக பஞ்சாபில் 32 வாக்குச் சாவடிகள், சிந்துவில் 10, கைபர் பக்துன்கவா நகரில் 6 மற்றும் பலுசிஸ்தானில் ஒரு வாக்குச் சாவடிகளில் அளவுக்கதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. ஒராங்கி, மாடல் காலனி, மலீர் காலனி, ஷா பைசல் காலனி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில்தான் இதுபோல் முறைகேடு நடந்துள்ளது.
ஒரங்கி நகரில் ஒரு வாக்குச் சாவடியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1,349. ஆனால், பதிவான வாக்குகள் 2,508. இதே நகரில் மற்றொரு வாக்குச் சாவடியில் வாக்காளர் எண்ணிக்கை 1,230. ஆனால், பதிவான வாக்குகள் 1,4,84. இப்படி 49 சாவடிகளில் அளவுக்கதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கள்ள ஓட்டு போடுபவர்கள் கவனத்திற்கு... ‘கொஞ்சம் கணக்கு பார்த்து ஓட்டு போடுங்கப்பா...! ‘
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications