மும்பையில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண் நோயாளியை கற்பழித்துவிட்டு டாக்டர் ஓட்டம்
மும்பை: மும்பை புறநகர் பகுதியில் உள்ள கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற வந்த 26 வயது இளம்பெண்ணை மருத்துவர் ஒருவர் கற்பழித்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கிழக்கு பகுதியில் உள்ளது கட்கோபர். அந்த பகுதியைச் சேர்ந்த 26 வயது திருமணமான இளம்பெண் ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக கார் பகுதியில் உள்ள கிளினிக் ஒன்றுக்கு சென்றார். அப்போது மருத்துவர் அவரை கற்பழித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண் நடந்தது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அப்பெண்ணின் கணவர் கூறுகையில்,
அந்த மருத்துவர் எனக்கு பணம் கொடுத்து விஷயத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயன்றார். ஆனால் நான் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் மருத்துவரை தங்கள் வாகனத்தில் அழைத்துச் செல்லாமல் அவரின் காரில் வர அனுமதித்தனர்.
ஆனால் மருத்துவர் காவல் நிலையத்திற்கு செல்லாமல் தப்பிவிட்டார் என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவரை உடனே கைது செய்யக் கோரி மக்கள் நேற்று காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications