உ.பி யில் கொடூரம்: ஊசி மூலம் ஆசிட், பெட்ரோல் செலுத்தி கைதி கொலை
ஈட்டா: உ.த்திரப்பிரதேசத்தில் கொலை குற்றவாளி ஒருவர் போலீசாரால், ஆசிட் மற்றும் பெட்ரோலினை ஊசி வாயிலாக செலுத்தப்பட்டு கடும் சித்ரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஈட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்பீர், பானிகான் ஆகியோர் , கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றனர். இவர்கள் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக முதலில் புகார் எழுந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று பல்பீரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து லக்னோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பல்பீர் இறந்தார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு ஊசி வாயிலாக ஆசிட், பெட்ரோல் செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குற்றத்தை ஏற்கச்சொல்லி போலீசார் பல்பீரை வற்புறுத்தியதாகவும், அதனாலேயே சூடான தட்டில் அமர வைப்பது மற்றும் இது போன்ற கொடுமைகளை புரிந்துள்ளதாகவும் அவரின் குடும்பத்தினர் போலீசார் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications