மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமனார் செய்த காமக் கொடூரத்தை கண்டு கொள்ளாமல், தட்டிக் கேட்காமல் கணவர் இருந்ததால் வேதனையுற்ற பெண் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கில் தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை கோட்டரவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (35). வேன் டிரைவரான இவரது மனைவி பெயர் வல்சலா. 30 வயதான வல்சலாவும், ராஜேஷும் காதலித்து மணந்தவர்கள். இருவருக்கும் இரு குழந்தைகள் இருந்தனர்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வரும். இதனால் குழந்தைகளை நாகர்கோவில் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தார் வல்சலா. பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் வீட்டுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வல்சலா, குழந்தைகள் இருவரும் பிணமாக தூக்கில் தொங்கிக் காணப்பட்டனர்.
மார்த்தாண்டம் போலீசார் 3 பேரின் பிணங்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் வல்சலாவின் சகோதரி ராணி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் ராஜேஷின் குடும்பத்தார் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில், ராஜேஷ், அவரது தந்தை நாகமணி (68), தாயார் மேரி தங்கம் (65), சகோதரி ராணி (36) ஆகிய 4 பேர் மீதும் கொலை வழக்கு போடப்பட்டது. அவர்களில் ராஜேஷ், நாகமணியை போலீஸார் கைது செய்தனர்.மற்றவர்கள் தப்பி விட்டனர்.
சிக்கிய தந்தை, மகனிடம் விசாரணை நடத்திய போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் நாகமணி செய்த அட்டூழியங்கள். மருமகள் என்றும் பாராமல் செக்ஸ் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார் நாகமணி. இதுகுறித்து பலமுறை கணவரிடம் அழுது புலம்பியுள்ளார் வல்சலா. ஆனால் ராஜேஷ் கண்டுகொள்ளவில்லை. இது மாமனாருக்கு வசதியாகப் போய் விட்டது. குடிபோதையில் பலமுறை மருமகளிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.
இந்தக் கொடுமை தாள முடியாமல்தான் குழந்தைகளுடன் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விட்டார் வல்சலா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications