அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்ட தேதி அறிவிப்பு
சென்னை: இம்மாதம் 25-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடை பெற இருப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட ஆலோசனை கூட்டங்கள் வருகிற 25-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொது மக்களிடம் விளக்குவது, பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளை சேர்ந்தவர்களை தயார்படுத்துவது, கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்ள இந்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயளாளரும், அமைச்சருமான டாக்டர் வைகைச் செல்வன் தலைமையில் நடைபெறும். ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் பகுதியைச் சேர்ந்த பாசறை நிர்வாகிகள் அனைவரும் ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்' என இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications