கற்பழிப்பு என்பது மிகவும் கொடூரமான, மானக்கேடான குற்றம்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பலாத்கார குற்றம் சாட்டப்பட்ட ஒருவன், அந்த தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தான். நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரணைக்கு அனுமதித்த, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்தான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். மேலும் நீதிபதிகள் அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது...
கோடூரச்செயல்...
சமுதாயத்தில் கற்பழிப்பு என்பது ஒரு பெண்ணின் உடலை, மனதை, தனிமையை தாக்கி நிகழ்த்தப்படும் கொடூரச் செயலாகும். அது, தார்மீக ரீதியாக, உடல் ரீதியாக மிகவும் மானக்கேடான குற்றம் ஆகும்.ஒரு கொலைகாரன் தான் கொலை செய்யும் நபரின் உடலை அழிக்கிறான் என்றால், கற்பழிப்பு காமுகன் நிராதரவான ஒரு பெண்ணை சீரழித்து, கெடுத்து மன உளைச்சலையும் கொடுக்கிறான்.
வாழ்க்கையே பாழாகிறது...
கற்பழிப்பு என்பது பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒட்டு மொத்த வாழ்க்கையையே ஆட்டம் காண வைத்துவிடுகிறது. ஆகவே அவள் ஒரு விலங்கைவிட கேவலமாக மதிக்கப்படுகிறாள். அவளது வாழ்க்கையில் ஒரு மாறாத, அழிக்க முடியாத வடுவை அந்த கற்பழிப்பு உண்டாக்கி விடுகிறது.
உள்ளாராத வடு...
அந்த வடு, வெளிப்புறமாக உடலில் காயம் படும் ஒருவரைவிட, கற்பழிக்கப்பட்டவளை மிகக் கேவலமான பீடத்தில் வைத்து விடுகிறது.கற்பழிப்பு என்பது இந்த ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் எதிரான குற்றம். பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்.
கவுரவத்தை சீரழிக்கிறது...
கற்பழிப்பு மிகவும் வெறுக்கத்தக்க குற்றம். அது பாதிக்கப்பட்ட பெண்ணின் கவுரவத்தை அடுக்கடுக்காக, பல வழிகளிலும் சீர் குலைக்கிறது. அவளுடைய மரியாதையை, மதிப்பை, கவுரவத்தை ஒட்டு மொத்தமாக அழித்து விடுகிறது.
மனநிலையையும் பாதிக்கிறது...
அவளது உடலை மாத்திரமல்ல, மன நிலையையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அழிக்க முடியாத வடுவையும் உண்டாக்கி விடுகிறது' என இவ்வாறு நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
தனியாக வாழும் தம்பதிகள்.. உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழக்குகள் தொடர்பாக முக்கியமான தீர்ப்பு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தகுதி அரசு வேலைகள்.. தமிழக வங்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications