குடும்பத் தகராறு.... 3 குழந்தைகளை கிணற்றில் வீசி தற்கொலைக்கு முயன்ற தாய் கைது
திருவண்ணாமலை: வந்தவாசி அருகே குடும்பத்தகராறில் மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜரினா (வயது 35). இவர்களுக்கு ஜகருல்லா (5) என்ற மகனும், கிஸ்மத் (2 1/2), யாஷ்மின் (1 1/2) என்ற 2 மகள்களும் இருந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு இஸ்மாயில் இறந்து விட்டார். அதன்பிறகு ஜரினா, தனது மகன், மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இதனிடையே உத்திரமேரூரை அடுத்த குப்பையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பானிபூரி வியாபாரி அருள் (38) என்பவருடன் ஜரீனாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. அருள் ஏற்கனவே கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார்.
எனவே கணவனை இழந்து கைக்குழந்தைகளுடன் தவிக்கும் ஜரினா மற்றும் அவரது குழந்தைகளை அருள் குப்பையநல்லூர் கிராமத்துக்கு அழைத்து வந்து கணவன்-மனைவி போல் குடித்தனம் நடத்தினார். இந்த நிலையில் நேற்று காலை அருளுக்கும், ஜரினாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே ஜரினா, தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மதியம் 3 மணியளவில் 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பம்புசெட்டு கிணற்றுக்கு சென்று மூன்று குழந்தைகளையும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் தள்ளினார்.
அதன்பிறகு தானும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்ய முயன்றார். அப்போது வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து, ஜரினாவை உயிருடன் மீட்டனர். ஆனால் அவரது 3 குழந்தைகளும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டன. சம்பவ இடத்திற்கு வந்த உத்திரமேரூர் போலீசார், கிணற்றில் மிதந்த 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து ஜரினா, எதற்காக தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்ய முயன்றார்? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.தலைமறைவான அருளை தேடி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications