ஒற்றைக்காலோடு ’எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் ’ அருணிமா

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற நம்பிக்கை ஒன்றே போதுமானது, இரண்டு கால்கள் அவசியமில்லை என நிரூபித்துள்ளார் அருணிமா சின்கா.
உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அருணிமா சின்கா (வயது 25), வாலிபால் வீராங்கனை. கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் பயணம் செய்தபோது, நகை பறிக்கும் கும்பல் ஒன்று அவரை கடுமையாகத் தாக்கி ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசியது. இந்த விபத்தில் அருணிமா தனது இடது காலை இழந்தார்.
சாதிக்கும் துடிப்பு...
தன் வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் இருந்த அருணிமா இந்த விபத்தினால் சோர்ந்து போய் முடங்க விரும்பவில்லை. எவரெஸ்ட் மலையேற்றம் தொடர்பான தகவல்கள், சாதனை வீரர்களைப்பற்றி படித்து தெரிந்துகொண்டு அவர் தானும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று முடிவு செய்தார்.

உறுதுணை...
மூத்த சகோதரர் மற்றும் பயிற்சியாளரின் ஊக்கத்தை மட்டும் துணையாகக் கொண்டு, உத்தரகாசியில் உள்ள டாடா ஸ்டீல் அட்வென்ச்சர் பவுண்டேசனில் இணைந்து மலையேற்ற பயிற்சி பெற்றார்.
முதல் மாற்றுத்திறனாளி...
சரியான பயிற்சிகளோடு எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்ட அருணிமா, நேற்று காலை 10.55 மணிக்கு சிகரத்தை எட்டினார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications