தேர்தல் நடந்தால்... அதிமுகவுக்கு 30 தொகுதி! காங். கட்சிக்கு செம தோல்வி: கருத்துக் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் கட்சி தோல்வியையே சந்திக்க நேரிடும் என்றும் தமிழகத்தில் அதிமுக 30 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஹெட்லைன்ஸ் டுடே- சி வோட்டர் இணைந்து தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்றும் திமுகவுக்கு 4 தொகுதிகள்தான் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் வாக்கு சதவீதம் எப்படி?

தேசிய அளவில் வாக்கு சதவீதம் எப்படி?

தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 31% வாக்குகளையும் காங்கிரஸ் 24% வாக்குகளையும் பெறும் என்று தெரியவந்துள்ளது. இதர கட்சிகளுக்கு மொத்தமாக 45% வாக்குகள் கிடைக்கும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு

பாஜகவுக்கு 137 தொகுதிகள்!

பாஜகவுக்கு 137 தொகுதிகள்!

இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் பாரதிய ஜனதா கட்சி 137 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இருக்குமாம். ஐக்கிய ஜனதா தளத்துக்கு 19 தொகுதிகளும் சிவசேனாவுக்கு 14 தொகுதிகளும் சிரோமணி அகாலி தளத்துக்கு 6 தொகுதிகளும் கிடைக்குமாம். மொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 179 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. இது கடந்த தேர்தலை விட 27 தொகுதிகள் கூடுதலாகும்.

பீகாரில் எப்படி?

பீகாரில் எப்படி?

40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மட்டும் 19 தொகுதிகளையும் அதன் கூட்டணிக் கட்சிகள் 13 தொகுதிகளையும் கைப்பற்றுமாம்..லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் இம்முறை 8 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியும்தான் கிடைக்குமாம்..

பாஜக ஆளும் மாநிலங்களில்...

பாஜக ஆளும் மாநிலங்களில்...

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பெரும்பான்மை இடங்களை பாஜக கைப்பற்றுமாம்.. மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளில் 16 ஐயும், குஜராத்தில் 20 தொகுதிகளையும் பாஜக அணி கைப்பற்றலாம் என்பது ஹெட் லைன்ஸ் டுடேயின் கருத்துக் கணிப்பு.

உ.பி, ஆ.பி.மகாராஷ்டிராவில் எப்படி?

உ.பி, ஆ.பி.மகாராஷ்டிராவில் எப்படி?

உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 29 தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 27 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி 14 தொகுதிகளிலும் வெல்லக் கூடுமாம். காங்கிரஸ் கட்சி கடந்த முறை வென்ற 26 தொகுதிகளில் 16 ஐ இழந்து 10 தொகுதிகளில்தான் வெல்லக் கூடுமாம்.. ஆந்திர பிரதேசத்தைப் பொறுத்தவரையில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11 தொகுதிகளையும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 11 தொகுதிகளையும் கைப்பற்றலாம். தெலுங்கு தேசம் கட்சியோ 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெல்லக் கூடுமாம்.. மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் சிவசேனா 14 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்.. காங்கிரஸ் கட்சிக்கு 12 தொகுதிகள் கிடைக்கலாம்..

மேற்குவங்கத்தில் மமதா ஆதிக்கம்

மேற்குவங்கத்தில் மமதா ஆதிக்கம்

மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரையில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்... இடதுசாரிகள் கடந்த முறை கைப்பற்றியதைப் போல 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெல்லக் கூடுமாம்...

தமிழகத்தில் அதிமுக ஆதிக்கம்..

தமிழகத்தில் அதிமுக ஆதிக்கம்..

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக 30 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்.. திமுகவுக்கோ 4 தொகுதிகள் தான் கிடைக்குமாம்.. கடந்த முறை 8 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை 1 தொகுதிதானாம்.. தேமுதிகவுக்கு 2 தொகுதியும் மதிமுகவுக்கு 1 தொகுதியும் கிடைக்கிறதாம்..

எந்த அணிக்கும் போகக் கூடிய கட்சிகள்

எந்த அணிக்கும் போகக் கூடிய கட்சிகள்

இதில் எந்த அணிக்கும் போகக் கூடிய கட்சிகளாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளவை... அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திமுக, தேமுதிக என மக்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+