பிரதமர் வேட்பாளராக மோடி.. பாஜக அணிக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும்: கருத்துக் கணிப்பு
Subscribe to Oneindia Tamil

ஹெட் லைன்ஸ் டுடே- சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 220 தொகுதிகள் கிடைக்கும். அதாவது கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலைவிட 41 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 155 தொகுதிகள் கிடைக்கும் . மூன்றாவது அணி அல்லது இதர கட்சிகளுக்கு 168 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை மோடியை முன்னிறுத்தாமல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலை சந்திக்குமேயானால் 179 தொகுதிகள் மட்டும் கிடைக்கும்.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 132ம் இதர கட்சிகளுக்கு 232 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.












Click it and Unblock the Notifications