அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் உள்ள நபரை பிடிக்க கமாண்டோ படை... பீதியில் மக்கள்

கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் காலையில் பிரதான சாலைக்கு வந்து துப்பாக்கியைக் காட்டி பலரையும் மிரட்டியிருக்கிறார். பின்னர் மீண்டும் வீட்டுக்குள் சென்று தாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசருக்குத் தகவல் தெரிவிக்கப்பட சிறப்பு அதிரடிப்படையில் அங்கு குவிந்தனர்.
மேலும் தற்கொலை மிரட்டல் விடுத்த நபருடன் ஒலிபெருக்கி மூலமும் போலீசார் பேசி சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. தற்கொலை மிரட்டல் விடுக்கும் நபரோ ஐபிஎல் பிக்சிங் தம்மிடம் ஏராளமான தகவல்கள் இருப்பதாகவும் அதைப் பற்றியெல்லாம் ஊடகங்கள் போடவில்லை என்றும் சொல்கிறார்.
மனநலம் பாதிப்பா?
அதே நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பறவைகள் வரட்டும்.. பேசுகிறேன் என்கிறார். அவர் வீட்டின் ஜன்னல் வழியே ஊடகங்களுக்கு எழுதிக் கொடுத்த அறிக்கையில் சினிமா ஆபாசத்தைத் தடுக்க வேண்டும், மதுபான ஆலைகளை மூட வேண்டும் என்றும் இதற்காக தாம் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ஐ.பி.எல் பிக்சிங்
ஐபிஎல் பிக்சிங்கில் ஈடுபட்டு பெரும் பணத்தை இழந்ததால் விஜயகுமார் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர். அவருடன் பெண் ஒருவரும் இருப்பதாகவும் அதே நபரே சொல்லுகிறார். ஆனால் அந்தப் பெண்ணை தாம் சுட்டுக் கொல்லமாட்டேன்..நாட்டு நலனுக்காக தன்னைத்தானே சுட்டுக் கொல்வேன் என்றும் அவர் கூறுகிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதி பரபரப்பாக இருக்கிறது. குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர்.
மருத்துவக்குழு வரவழைப்பு
துப்பாக்கி நபர் மூலம் அசாம்பாவிதம் ஏதேனும் நடைபெற விதம் உயிர் சேதம் ஏற்ப்பாடமல் இருப்பதற்காகவும் மருத்துவ குழு 2 முதல் உதவி வாகனங்களுடன் தயார் நிலையில் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
கமாண்டோ படை
இந்நிலையில், குடியிருப்பில் துப்பாக்கியுடன் மிரட்டல் விடுக்கும் விஜயகுமாரை பிடிப்பதற்கு கமாண்டோ படை வரவழைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்!












Click it and Unblock the Notifications