பாமகவை வளைக்கும் திமுக.... கூட்டணியில் இருந்து விலகுகிறதா விடுதலை சிறுத்தைகள்?

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தனித்தே தேர்தலை சந்திப்போம் என்று பிரகடனம் செய்தது அதிமுக. இருப்பினும் தற்போதைய நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக இந்த அணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சி மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக் வன்னியர் வாக்குகளை பெறுவதற்காக தனிக் கட்சி தொடங்கியிருக்கும் பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இணைத்துக் கொண்டு இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தவும் அதிமுக முயற்சிக்கலாம்..
இந்த நிலையில் திமுக கூட்டணியில் பிரிக்க முடியாத அங்கமாக இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மரக்காணம் கலவரத்தையடுத்து ஜெயலலிதா அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறது. ஆனால் திமுகவோ அதிமுக அரசை விமர்சித்து வருவதுடன் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்தும் வருகிறது. இதனால் 'எந்த திராவிட' கட்சியுடனும் ஒருபோதும் கூட்டணி இல்லை என்ற பாமகவின் கோஷம் வழக்கம் போல வெற்று கோஷமாகும் நிலைமை உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில்தான் தாம் தொடருகிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருக்கிறார். ஆனால் திமுகவோ தமது எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனை டாக்டர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி நலம் விசாரித்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி சார்பில் 'தூதராக' சென்ற இளங்கோவன், ராமதாஸின் மகன் அன்புமணியை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
தமிழக அரசியலில் இப்படியான 'எதிர்பாராத' சந்திப்புகள்தான் கூட்டணிக்கு அச்சாரம் போடக் கூடியவை.. தேமுதிக தங்களது அணிக்கு வருமா? வராதா? என்ற இழுபறியில் திமுக இருக்கும் நிலையில் பாமகவையாவது அழைத்துக் கொள்ளலாம் என்றே திமுக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனால் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எந்த நேரத்திலும் தலைமைச் செயலகத்துக்கு சென்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, மரக்காணம் சம்பவத்துக்காக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications